சி.ஆர்.பி.எப் பயிற்சி கல்லூரியில் நவீன சுப்பாக்கி சுடும் மையம் திறப்பு

கோவை:துடியாலூரை அடுத்த கதிர்நாயக்கன்பாளையத்தில் மத்திய ரிசர்வ் போலீஸ் பயிற்சி கல்லூரி சி.ஆர்.பி.எப் உள்ளது.இந்தியா முழுவதும் தேர்ந்தெடுக்கப்படும் காவலர் முதல் உதவி ஆய்வாளர்கள் வரை இங்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

தற்போது இந்த வளாகத்தில் தடுப்பு சுவர் அமைத்து நவீன துப்பாக்கி சுடும் பயிற்சி மைதானம் தொடங்கப்பட்டுள்ளது.இந்த மையத்தை சி.ஆ.பி.எப் தலைவர் மற்றும் இயக்குனர் சுஜய் லால் தோசன் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார்.இதனை தொடர்ந்து சி.ஆர்.பி.எப் வீரர்களின் தூப்பாக்கி சுடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் கலந்துக்கொண்ட பெண் வீரர்கள் உள்ளிட்டவர்கள் தரையில் படுத்தபடி குறிப்பிட்ட தூரத்தில் வைக்கப்பட்டு இருந்த பானைகளை குறி தவறாமல் சுட்டு வீழ்த்தி சாகசம் செய்தனர்.இந்நிகழ்வில் 59 வயதான வீரர் ஒருவர் இரும்பு தகிடை தொடர்ச்சியாக சுட்டு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.பின்னர் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய சி.ஆர்.பி.எப் தலைவர் சுஜய் லால் கூறுகையில் இந்தியாவில் உள்ள சி.ஆர்.பி.எப் பயிற்சி கல்லூரிகளில் அதிநவீன கட்டமைப்பு இங்கு தான் உருவாக்கப்பட்டுள்ளது எனவும் ஏற்கனவே இங்கு சுப்பாக்கி சுடும் மையம் உள்ள நிலையில் தற்போது மேலும் பாதுகாப்பான முறையில் உருவாக்கப்பட்டுள்ளது எனவும் இந்த மையம் மூலம் தரப்படும் பயிற்சியால் சி.ஆர்.பி.எப் வீரர்களின் தூப்பாக்கி சுடுவதலில் தங்கள் தனித்திறமையை வளர்த்துக்கொள்ள முடியும் என தெரிவித்தார்.

தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் பிரிவினைவாதிகளை கட்டுப்படுத்தவும், உள்நாட்டில் அமைதியை நிலைநாட்டவும் அந்தந்த மாநில அரசுடன் இணைந்து சி.ஆர்.பி.எப் பனி செய்து வருவதாக கூறியவர் இதற்காக சி.ஆர்.பி.எப் பயிற்சி வீரர்களுக்கு பல்வேறு தொழில்நுட்ப பயிற்சிகள் வழங்கப்பட்டு வருவதாக கூறினார்.மேலும் நடைபெறும் மிசோரம், சத்திஸ்கர் உள்ளிட்ட 5 மாநில தேர்தலில் உள்ளூர் காவலர்களுடன் இணைந்து சி.ஆர்.பி.எப் வீரர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் எனவும்

இதற்காக தனியாக சி.ஆர் .பி.எப். வீரர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது என்றார்.காஷ்மீர் பகுதிகளில் முன்பை விட தற்போது தீவிரவாதம் கட்டுபடுத்தப்பட்டு உள்ளது எனவும் சந்தேகப்படும் இடங்களில் கூடுதலாக சி.ஆர்.பி.எப் வீரர்கள் மற்றும் ராணுவ வீரர்கள் உள்ளதாக கூறியவர் ட்ரோன் கேமரா மூலம் தீவிரவாதிகளின் முகாம்களை கண்காணித்து அழிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் கோவை மாநகர காவல்துறை ஆணையாளர் பாலகிருஷ்ணன், மேற்கு மண்டல ஐ.ஜி பவானிஸ்வரி உள்ளிட்ட காவல்துறையினர் சி.ஆர்.பி.எப் அதிகாரிகள்,வீரர்கள் திரளாக கலந்துக்கொண்டனர்.

Tags

Next Story