அதிநவீன முறையில் காசநோய் கண்டறியும் முகாம் !

அதிநவீன முறையில் காசநோய் கண்டறியும் முகாம் !

காசநோய் கண்டறியும் முகாம்

கட்டாலங்குளத்தில் அதிநவீன முறையில் காசநோய் கண்டறியும் முகாம் நடைபெற்றது. 

தேசிய காசநோய் ஒழிப்பு திட்டம் மற்றும் கடம்பூர் காசநோய் பிரிவின் சார்பாக காசநோய் அதிகளவில் பாதிக்கப்பட்ட கிராமங்களில் காசநோய் கண்டறியும் முகாம் நடைபெற்று வருகிறது.இதன் ஒரு பகுதியாக கட்டாலங்குளத்தில் அதி நவீன முறையில் நடமாடும் டிஜிட்டல் எக்ஸ்ரே வாகனம் மூலமாக காசநோய் கண்டறியும் முகாம் நடைபெற்றது.

இம் முகாமை கட்டாலங்குளம் பஞ்சாயத்து தலைவர் சேசுபால் ராய் (என்ற) தம்பா வரவேற்று பேசினார். இம் முகாமில் வெள்ளாளங்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் ஐஸ்வர்யா தலைமை வகித்து பேசுகையில் சர்க்கரை நோயாளிகள் காசநோய் தொற்றால் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர் என்றார், எனவே சர்க்கரை நோயாளிகள் காசநோய் பரிசோதனை செய்து கொள்வது அவசியம் என்று அறுவுறுத்தினார்.

மற்றும் ஊர் பொதுமக்களிடம் தினமும் உணவில் சேர்க்க வேண்டிய உணவுப் பொருட்கள் பற்றி பேசினார். மேலும் முத்துக்குமார் மாவட்ட நலக்கல்வியாளர் (காசம்) பேசுகையில் காசநோய் அறிகுறிகள், பரவும் விதம் பற்றி பேசினார். இம் முகாமில் எக்ஸ்ரே மூலமாக காசநோய் பரிசோதனை செய்யபட்ட நபர்களுக்கு மீண்டும் சளி மாதிரிகள் சேகரிக்கபட்டு பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இம் முகாமில் கலந்து கொண்ட ஊர் பொதுமக்களுக்கு இரத்த பரிசோதனை செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கட்டாலங்குளம் பஞ்சாயத்து துணைத்தலைவர் மாரியம்மாள் மற்றும் முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் காசி விஸ்வநாதன், முதுநிலை ஆய்வுகூட மேற்பார்வையாளர் தனசெல்வி சோபியா, தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க ஆய்வக நுட்புனர்.

முத்துலட்சுமி, சுகாதார பார்வையாளர் திவ்யா, இடைநிலை சுகாதார பணியாளர்கள் அனுசுயா, பவுல்வென்சி மேரி, பாக்கியலட்சுமி மற்றும் பஞ்சாயத்து அலுவலர்கள் மற்றும் கட்டாலங்குளம் ஊர் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர் இந்த முகாமிற்கான ஏற்பாடுகளை பஞ்சாயத்து தலைவர் சேசுபால் ராய் (என்ற) தம்பா மற்றும் முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் காசி விஸ்வநாதன் ஆகியோர் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர். பஞ்சாயத்து தலைவர் சேசுபால் ராய் நன்றி கூறினார்

Tags

Next Story