தர்மபுரியில் மகளிர் காங்கிரஸ் கூட்டத்தில் மாநில தலைவர் பங்கேற்பு

தர்மபுரியில் நடைபெற்ற மகளிர் காங்கிரஸ் கூட்டத்தில் மாநில மகளிர் காங்கிரஸ் தலைவர் காளியம்மாள் பங்கேற்றார்.

தர்மபுரி மாவட்ட மகளீர் காங்கிரஸ் சார்பில் மாவட்ட மகளிரணி தலைவர் காளியம்மாள் தலைமையில் மகளிர் அணி கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்க வந்த மாநில தலைவர் ஹசினா சையத் செய்தியாளர்களை சந்தித்தபோது மாண்புமிகு மரபை மறந்த பாரத பிரதமர் மோடி 10 ஆண்டுகாலம் சாதிக்காததை இந்த 5 ஆண்டுகளில் என்ன சாதிக்கபோகிறார்கள் தங்களின் கூட்டணி ஆட்சி நீடிப்பது கடினம் நாட்டில் வருடத்திற்கு 2 கோடி இளைஞர்களுக்கு வேலை வாப்பு தருவதாக கூறிய மோடி 10 ஆண்டுகளில் 20 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு தந்தரா..?

ராமர் கோவிலை மட்டுமே கட்டினார் என கேள்வி எழுப்பிய அவர் மக்கள் செல்வாக்கு குறைந்த பாஜாக பிரதமர் மோடி நேரு போல் ஆட்சி செய்வோம் என கூறுவது வெட்கக்கேடான செயல் என மோடி மீது குற்றம்சாட்டினார்... நாட்டில் உள்ள 140 கோடி மக்களில் 70 கோடிக்கும் அதிகமாக பெண்கள் உள்ளனர் பெண்கள் முன்னேற்றத்திற்கு மோடி என்ன செய்தார் 33 சதவீதம் இன்னும் முடிவு பெறவில்லை... இளைஞர் காங்கிரஸ் சார்பில் நீட் எதிர்ப்பு போராட்டத்தை ராகுல் காந்தி அறிவித்த நிலையில் வலிமையான எதிர்கட்சியான காங்கிரசை மோடி எப்படி சமாளிப்பார் என மகளீர் காங்கிரஸ் மாநில தலைவர் கேள்வி எழுப்பினார்.

Tags

Read MoreRead Less
Next Story