மாநில சிலம்பம் - சாஸ்த்ரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் தகுதி

மாநில சிலம்பம் - சாஸ்த்ரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் தகுதி

சிலம்பம் 

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அருகே உள்ள கருங்காலிகுப்பத்தில் உள்ள சாஸ்த்ரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் திருவண்ணாமலையில் உள்ள மாவட்ட விளையாட்டரங்கில் பாரதியார் தினம் மற்றும் குடியரசு தின விழா முன்னிட்டு கடந்த 30ம் தேதி, 1 மற்றும் 2ம் தேதி ஆகிய நாட்கள் நடந்த சிலம்பம் போட்டியில் பங்கேற்றனர். இதில் 14 வயதுக்குட்பட்டோர் பிரிவில் 8ம் வகுப்பு படிக்கும் நட்சத்திரா என்ற மாணவி மாவட்ட அளவில் முதலிடம் பிடித்து மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றார். 17 வயதுக்குட்பட்டோர் பிரிவில் 8ம் வகுப்பு படிக்கும் முஜாபர் ஜாபர் என்ற மாணவன் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்து மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றார். சாதனை புரிந்த மாணவி நட்சத்திரா, மாணவன் முஜாபர் ஆகிய இருவரையும் பள்ளியின் செயலர் சம்பத்குமார், முதல்வர் கலைச்செல்வி, பயிற்சியாளர் மாஸ்டர் செல்வம் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

Tags

Next Story