மாநில கைப்பந்து போட்டி : சேலம் பள்ளி மாணவர்கள் வெற்றி

மாநில கைப்பந்து போட்டி :  சேலம் பள்ளி மாணவர்கள் வெற்றி

வெற்றி பெற்ற மாணவர்கள் 

புதுக்கோட்டையில் பள்ளி கல்வித்துறை சார்பில் நடந்த மாநில அளவிலான கைப்பந்து போட்டியில் முதலிடம் பெற்ற சேலம் தனியார் பள்ளி மாணவர்களை மாவட்ட கைப்பந்து கழக நிர்வாகிகள் பாராட்டினர்.
பள்ளி கல்வித்துறை சார்பில் மாநில அளவில் மாணவர்களுக்கான கைப்பந்து போட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்றது. இதில் சேலம் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி மாணவர்கள் அணி முதல் இடம் பிடித்து வெற்றி பெற்றது. இதையடுத்து மாவட்ட கைப்பந்து கழகம் சார்பில், வெற்றி பெற்ற மாணவர் அணிகளுக்கு பாராட்டு விழா நேற்று நடைபெற்றது. இதற்கு மாவட்ட கைப்பந்து கழக தலைவர் ராஜ்குமார் தலைமை தாங்கி மாணவர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டு தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் கைப்பந்து கழக ஆலோசகர் விஜயராஜ், செயலாளர் சண்முகவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story