சேலம் கோகுலம் செவிலியர் கல்லூரியில் மாநில பயிலரங்கம்

செவிலியர் பயிலரங்கம்
சேலம் ஸ்ரீ கோகுலம் செவிலியர் கல்லூரியில் அடிப்படை மற்றும் மேம்பட்ட உயிர்காக்கும் முதலுதவி- வாழ்விற்கும், இறப்பிற்கும் இடையே ஒரு பாலம் என்ற தலைப்பில் மாநில அளவிலான ஒரு நாள் பயிலரங்கம் நடந்தது. கல்லூரியின் மேலாண்மை இயக்குனர் டாக்டர் அர்த்தனாரி தலைமை தாங்கி பேசினார். கல்லூரி முதல்வர் தமிழரசி வரவேற்றார்.
தலைமை விருந்தினராக கோகுலம் மருத்துவமனையின் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர் ஜெயதேவ் கலந்து கொண்டு பேசினார். பயிலரங்க அறிக்கையை பேராசிரியை கனகதுர்கா வாசித்தார். பயிலரங்கில் அவசர மற்றும் தீவிர சிகிச்சை பிரிவை சேர்ந்த பல்வேறு வல்லுனர்கள் கலந்து கொண்டு விளக்கம் அளித்தனர். இதய செயல் இழப்பின் கண்ணோட்டம், அடிப்படை உயிர்காக்கும் முதலுதவி, மருந்துகள் மற்றும் சாதனங்கள் உள்ளிட்ட தலைப்புகளில் விளக்கம் அளிக்கப்பட்டது.
மேலும் ஒவ்வொருவருக்கும் தனித்தனியே திறன் பயிற்சியும் அளிக்கப்பட்டது. இதில் 200-க்கும் மேற்பட்ட செவிலியர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. முடிவில் கல்லூரியின் துணை முதல்வர் காமினி சார்லஸ் நன்றி கூறினார்.
