புனித வெள்ளியை முன்னிட்டு சிலுவைப்பாதை நிகழ்ச்சி

புனித வெள்ளியை முன்னிட்டு சிலுவைப்பாதை நிகழ்ச்சி

சிலுவை பாதை நிகழ்ச்சி

இரைமன்துறையில் புனித வெள்ளியை முன்னிட்டு நடைபெற்ற சிலுவை பாதை நிகழ்ச்சியில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, உலக மக்கள் யாவரையும் இரட்சிக்க வந்த இயேசு, யுத மன்னன் பிலாத் துவால் சிலுவை தீர்ப்பு கூறப்பட்டு, தலையில் முள் கிரீடம் அணிவித்து, கல்வாரி மலைக்கு சிலுவையுடன் இழுத்துச் செல்லப்பட்டு, சிலுவையில் அறைந்து கொல்லப் பட்டார்.இதனை நினைவு கூறும் வகையில், உலகம் முழுவதும் உள்ள அனைத்து கிறிஸ்தவ மக்களும் இந்த நாளை புனித வெள்ளியாக அனுசரித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் தூத்தூர் மறை வட்டத்திற்கு உட்பட்ட 8 மீனவ கிராமத்தி னர் ஒருங்கிணைந்து நடத்திய சிலுவை பாதை நிகழ்வானது நேற்று மாலை இரயுமன்துறையிலிருந்தும், நீரோடியிலிருந்தும் தனித்தனியாக துவங்கி இரவிபுத்தன்துறை இடப்பாடு பகுதியில் முடிவடைந்தது. நிகழ்ச்சியில் ஏராளமான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர்.

Tags

Next Story