கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அணைகளின் நிலவரம்
அணைகள் நிலவரம்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அணைகளின் நிலவரம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில்5 அணைகள் உள்ள நிலையில் அவற்றின் அளவுகள் மற்றும் நீர் இருப்பு குறித்த விவரங்கள் வெளியாகி உள்ளது கே ஆர் பி அணை மொத்த கொள்ளளவு ஆன 52 அடி உயரத்தில் 40.80 அடி உயரத்தில் நீர் இருப்பு உள்ளதாகவும் அணைக்கு வினாடிக்கு 453 கன அடி வீதம் நீர் வரத்து வந்து கொண்டுள்ளதாகவும்,
வெளியேற்றம் வினாடிக்கு 12 கன அடி விதம் நீர் வெளியேற்றப்பட்டு வருவதாகவும். இதனைத் தொடர்ந்து பாரூர் பெரிய ஏரியில் மொத்த கொள்ளளவு 15.60 அடி உயரத்தில் 6.20 அடி உயரத்திற்கு நீர் இருப்பு உள்ளதாகவும் தற்பொழுது வரையிலும் ஏரிக்கு நீர் வரத்து ஏதும் வரவில்லை. கெலவர பள்ளி அணையின் மொத்த கொள்ளளவு 44.28 அடி உயரத்தில் 25.91 அடி உயரத்துக்கு நீர் உள்ளதாகவும் நீர் பிடிப்பு பகுதிகளில் மழை பெய்ததால் அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 121 கன அடி வீதம் நீர் வரத்து வந்து கொண்டுள்ளதாகவும். பாம்பாறு அணையின் மொத்த கொள்ளளவான 19.6 அடி உயரத்தில் 0.20 அடி உயரத்திற்கு மட்டுமே நீர் இருப்பு உள்ளதாகவும்,
அணைக்கு நீர் வரத்து ஏதும் இல்லாமல் உள்ளதாகவும் சூளகிரி சின்னார் அணை மொத்த கொள்ளளவு 32.80 அடி உயரத்தில்1.12 அடி உயரத்திற்கு நீர் இருப்பு உள்ளதாகவும் நீர் வரத்து ஏதுமின்றி வறண்ட நிலை காணப்படுவதாகவும்பொதுப்பணித்துறையினர் தெரிவிக்கின்றனர்