தோட்டத்தில் கோழிகள் திருட்டு: சிசிடிவில் பதிவான இளைஞர்

தோட்டத்தில் கோழிகள் திருட்டு: சிசிடிவில் பதிவான இளைஞர்

சிசிடிவி காட்சி 

சாத்தான்குளம் அருகே தோட்டத்தில் வாலிபர் கோழி திருடும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள கடாச்சபுரத்தைச் சேர்ந்தவர் ஆரோன் டேவிட். வழக்கறிஞரான இவர் வீட்டுக்கு அருகில் உள்ள தோட்டத்தில் வான்கோழி, நாட்டு கோழிகள் வளர்த்து வருகிறார். அதில் 6 வான்கோழிகள் உள்ளிட்ட 19 கோழிகள் திருட்டு போய் உள்ளது. இதனால் அவர் தோட்டத்தில் பொருத்தியுள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது கடந்த 15ஆம்தேதி ஒரு இளைஞர் உள்ளே நுழைந்து அங்குள்ள கோழிகளை சாக்கு மூட்டையில் கட்டி திருடி செல்வது பதிவாகியுள்ள்ளது. இதனையடுத்து ஆரோன்டேவிட் மெஞ்ஞானபுரம் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி கோழி திருடனை தேடி வருகின்றனர். கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சி சாத்தான்குளம் பகுதியில் உள்ள சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Tags

Next Story