தேவபாண்டலம் பெருமாள் கோவிலை புனரமைக்க நடவடிக்கை தேவை

கோவிலை புரணமைக்க கோரிக்கை
சங்கராபுரம் அடுத்த தேவபாண்டலம் கிராமத்தில் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற பார்த்தசாரதி பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவில் 12ம் நுாற்றாண்டில் மகதை மண்டலத்தை ஆட்சி செய்த வானகோவரையன் என்ற சிற்றரசன் கட்டியதாக கூறப்படுகிறது.இவ்வூரில் தான் திரவுபதி சூரியபகவானிடம் வரம் கேட்டு அட்சயபாத்திரம் பெற்றதாக கூறப்படுகிறது.
இக்கோவில் இந்து அறநிலையதுறை கட்டுப்பாட்டில் உள்ளது. கோவில் பல ஆண்டுகளாக புதுப்பிக்கப்படாததால் கோவில் மதில் சுவர்கள் இடிந்தும்,கோவில் கோபுரங்களில் செடிகள் வளர்ந்து சிதிலமடைந்து வருகிறது. இக்கோவிலில் வைகுண்ட ஏகாதசி, சொர்க்கவாசல் திறப்பு, மார்கழி மாத ராப்பத்து, பகல் பத்து உற்சவம், மாசிமகம் தீர்த்தவாரி உள்ளிட்ட உற்சவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது.
சிதிலமடைந்து வரும் தேவபாண்டலம் பார்த்தசாரதி பெருமாள் கோவிலை புனரமைக்க சங்கராபுரம் எம்.எல்.ஏ., உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
