புதிதாக கூரைகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

புதிதாக கூரைகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

புதிதாக கூரைகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையையொட்டி உள்ள இருப்பு நடைப்பாதையில் புதிய கூரை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையையொட்டி, அரசினர் ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, வட்டார வளர்ச்சி அலுவலகம் ஆகியவை செயல்பட்டு வருகின்றன. பள்ளி மாணவ - மாணவியர் மற்றும் பொதுமக்கள், தேசிய நெடுஞ்சாலையை கடக்கும் போது, அடிக்கடி விபத்து ஏற்பட்டது. இதை தவிர்க்கும் விதமாக, சில ஆண்டுகளுக்கு முன், இரும்பு நடை மேம்பாலம் அமைக்கப்பட்டது. இது, கடந்த 2022ம் ஆண்டு, 'மாண்டஸ்' புயலின் காரணமாக பெருத்த சேதம் அடைந்தது.

இதன் கூரையில் அமைக்கப்பட்ட பிளாஸ்டிக் ஓடுகள் பிய்த்துக் கொண்டு, விபத்தை ஏற்படுத்தும் வகையில் காற்றில் ஊசலாடின. இதனால், தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் அச்சத்துடன் இப்பகுதியை கடந்து சென்றனர். பின், 2023ல் இரும்பு நடை மேம்பாலத்தின் கூரை மீது சேதமடைந்து தொங்கிக்கொண்டிருந்த பிளாஸ்டிக் ஓடுகள் அகற்றப்பட்டன.

அவற்றை அகற்றி ஓராண்டாகியும், இதுவரை மீண்டும் கூரை அமைக்கப்படாமல் திறந்தநிலையில் உள்ளது. கோடை விடுமுறை முடிந்து, ஜூன் 6-ல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால், பள்ளி மாணவ - மாணவர்களின் நலன் கருதி, புதிதாக கூரைகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story