சோழிங்கநல்லுார் சந்திப்பில் நெரிசலை குறைக்க நடவடிக்கை

சோழிங்கநல்லுார் சந்திப்பில் நெரிசலை  குறைக்க நடவடிக்கை
போக்குவரத்து நெரிசல் 
சோழிங்கநல்லுார் சந்திப்பில் நெரிசலை குறைப்பதற்கான நடவடிக்கைகளை போக்குவரத்து போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னையின் முக்கிய ஆறுவழிச் சாலையாக, பழைய மாமல்லபுரம் சாலை உள்ளது. இங்கு, மெட்ரோ ரயில் பாதை பணி நடப்பதால், நான்கு வழியாக மாற்றப்பட்டது. இதனால், போக்குவரத்து நெரிசல் வழக்கத்தைவிட அதிகரித்துள்ளது. மேலும், சாலையில் ஏற்பட்ட பள்ளங்களும், நெரிசலுக்கு முக்கிய காரணமாக உள்ளன. வாகன ஓட்டிகள் ஒவ்வொரு சிக்னலிலும், அதிக நேரம் காத்திருக்க வேண்டும். இதில், ஆம்புலன்ஸ் சிக்கினால், வழிவிட கூட இடம் இல்லாத அளவு நெரிசல் ஏற்பட்டது.

சோழிங்கநல்லுார் சந்திப்பில், 'யு டர்ன்' அமைத்தால், நெரிசலை குறைக்க முடியும் என, பொதுமக்கள் மற்றும் சமூக அலுவலர்கள் கோரிக்கை விடுத்தனர்.இதையடுத்து, போக்குவரத்து போலீசார், மெட்ரோ ரயில் நிர்வாகத்தினர், அச்சாலையில் ஆய்வு நடத்தினர். அப்போது, சாலை பள்ளங்களை சீரமைத்தால் தான், சந்திப்புகளில் நெரிசல் குறையும் என, போலீசார் கூறினர். இதற்காக, மெட்ரோ ரயில் நிர்வாகத்திற்கு கடிதம் எழுதியதுடன், 'சாலையை சீரமைத்தால் தான் பணி செய்ய தடையின்மை சான்று வழங்கப்படும்' என்றனர்.

Tags

Next Story