ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு : நடவடிக்கை எடுக்க கோரிக்கை

கன்னியாகுமரி மாவட்டம், தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பு தலைவர் வக்கீல் செலஸ்டின், பொதுச்செயலாளர் எஸ் அந்தோணி ஆகியோர் தமிழ்நாடு அரசுக்கு அனுப்பி உள்ள மனுவில் கூறியிருப்பதாவது:- தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தின் போது காவல்துறையினர் துப்பாக்கி சூட்டில் 15 பேர் உயிரிழந்தனர். கடந்த அதிமுக ஆட்சியில் நடந்த இந்த கொடூர சம்பவம் தொடர்பாக நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.
இந்த ஆணையம் விசாரணை நடத்தி இதன் அறிக்கை தமிழ்நாடு அரசிடம் சமர்ப்பித்து உள்ளது. அந்த அறிக்கை தற்போதைய தமிழ்நாடு அரசு முழுமையாக ஏற்றுக் கொண்டுள்ளது. ஆனாலும் இன்னும் உயர் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இது சம்பந்தமாக சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் மீது பாரபட்சம் இன்றி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். உச்ச நீதிமன்றத்தில் ஆலையை திறப்பதற்கு எதிராக வாதாடிய தமிழ்நாடு அரசின் செயலை வரவேற்கிறோம் என்று அந்த மனுவில் கூறிஉள்ளனர்.
