டாஸ்மாக் சுவரில் துளையிட்டு ரூ.1.60 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் திருட்டு

டாஸ்மாக்  சுவரில் துளையிட்டு ரூ.1.60  லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் திருட்டு

துளையிடப்பட்ட டாஸ்மாக் சுவர் 

மதுக்கடையின் சுவரில் துளையிட்டு ரூ.1.60 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் திருடப்பட்டு அருகேயுள்ள நாணல் புதரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
திருவோணத்தை அடுத்துள்ள திப்பன்விடுதி கிராமத்தில் அரசுக்குச் சொந்தமான மதுக்கடை உள்ளது. சனிக்கிழமை இரவு ஊழியர்கள் கடையை பூட்டிவிட்டு புறப்பட்டுச் சென்றனர். அதன் பிறகு நள்ளிரவில் இந்த மதுக்கடையின் சுவரைத் துளையிட்டு கடைக்குள் இருந்த ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது மதுக்கடையில் திருடப்பட்ட மதுபாட்டில்கள் மதுக்கடையின் அருகே நாணல் செடி மறைவிடத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை கண்டறிந்து, மதுபாட்டில்களை கைப்பற்றி வாட்டாத்திக்கோட்டை காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அதே பகுதியில் அனாதையாகக் கிடந்த ஒரு மோட்டார் சைக்கிளையும் காவல்துறையினர் கைப்பற்றினர். இதுகுறித்து மதுக்கடையின் மேற்பார்வையாளர் புகழேந்திரன் கொடுத்த புகாரின் பேரில் வாட்டாத்திக் கோட்டை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து மர்ம நபர்களைத் தீவிரமாக வலைவீசித் தேடி வருகின்றனர்.

Tags

Next Story