திருட்டு போன மோட்டார் சைக்கிள் போலீஸ் நிலையத்தில் - விட்டு சென்ற நபர் குறித்து விசாரணை !

திருட்டு போன மோட்டார் சைக்கிள் போலீஸ் நிலையத்தில் - விட்டு சென்ற நபர் குறித்து விசாரணை !

போலீஸ் நிலையம்

திருட்டு போன மோட்டார் சைக்கிள் போலீஸ் நிலையத்தில் விட்டு சென்ற நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது36). இவரது மோட்டார் சைக்கிள் திருட்டு போனது. இதுகுறித்து பள்ளப்பட்டி போலீசார் அந்த பகுதியில் கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அதில் 2 பேர் மாற்றுச்சாவி மூலம் மோட்டார் சைக்கிளை எடுத்து சென்றது தெரிய வந்து. அந்த நபர்களை போலீசார் தேடி வந்தனர். இதற்கிடையே பள்ளப்பட்டி போலீஸ் நிலையம் அருகில் கார்த்திகேயன் மோட்டார் சைக்கிள் நிறுத்தப்பட்டு இருந்தது. இதுபற்றி போலீசாரிடம் கேட்ட போது, வேறு ஒருவரது மோட்டார் சைக்கிளை எடுத்து வருவதற்கு பதில் தவறுதலாக இந்த மோட்டார் சைக்கிளை நண்பர்கள் எடுத்து வந்து விட்டனர் என்று கூறி விட்டு மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு சென்று விட்டார். இருப்பினும் அவர் மீது சந்தேகம் உள்ளதாகவும், விசாரணை நடத்தி வருவதாகவும் போலீசார் கூறினர்.

Tags

Next Story