கற்கள் வீசி 2 தரப்பினர் மோதல்: 4 பேர் காயம்

கற்கள் வீசி 2 தரப்பினர் மோதல்: 4 பேர் காயம்
பெயர் பலகை 
சேலம் அருகேகற்கள் வீசி 2 தரப்பினர் மோதிக் கொண்ட விபத்தில் 4 பேர் காயம் அடைந்தனர்.

சேலம் மாவட்டம் கெங்கவல்லி வட்டம் கெங்கவல்லி ஒன்றிய அலுவலகம் அருகே உள்ள ஓட்டலுக்கு நேற்று இரவு, 9:30 மணிக்கு டிபன் வாங்க வந்த இரு தரப்பை சேர்ந்த வர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து மோதலில் ஈடுபட்டனர்.

பின் இரு தரப்பினர், கற்களை வீசி தாக்கிக்கொண் டனர். வீரகனுார் இன்ஸ்பெக்டர் காந்திமதி உள்ளிட்ட போலீசார், இருதரப்பினரையும் விரட்டிவிட்டனர்.ஒரு தரப்பில் வெங்கடேஷ், 35, அறிவழகன்,30, தனுஷ், 21, ஆகியோரும் மற்றொரு தரப்பில்ராஜ்குமார், 30, என்பவரும் காயம் அடைந்து,கெங்கவல்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேலும் கெங்கவல்லி தனி பிரிவுஏட்டு சுந்தர்ராஜன் மீது கற்கள் பட்டன.

ஆனால் அவர் ஹெல்மெட் போட்டிருந்ததால் காயமின்றி தப்பினார். மோதலை அடுத்து ஆத்துார் டி.எஸ்.பி., நாகராஜன் தலைமையில், 20க்கும் மேற்பட்ட போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Tags

Read MoreRead Less
Next Story