நாம் தமிழர் கட்சி பெண் வேட்பாளர் மீது கல்வீச்சு

நாம் தமிழர் கட்சி பெண் வேட்பாளர் மீது கல்வீச்சு

ராணிப்பேட்டை அருகே நாம் தமிழர் கட்சியின் அரக்கோணம் தொகுதி பெண் வேட்பாளர் மீது கல் வீச்சு நடந்த நிலையில், நடவடிக்கை எடுக்க கோரி புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ராணிப்பேட்டை அருகே நாம் தமிழர் கட்சியின் அரக்கோணம் தொகுதி பெண் வேட்பாளர் மீது கல் வீச்சு நடந்த நிலையில், நடவடிக்கை எடுக்க கோரி புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ராணிப்பேட்டை அருகே நாம் தமிழர் கட்சியின் அரக்கோணம் பாராளுமன்ற தொகுதி பெண் வேட்பாளரை கற்களால் தாக்க முயன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி ராணிப்பேட்டை மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் வேட்பாளர் புகார் மனு கொடுத்துள்ளார்.

அரக்கோணம் பாராளுமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக அரக்கோணத்தை சேர்ந்த அப்ஷியா நஸ்ரின் அறிவிக்கப்பட்டுள்ளார். அதைத்தொடர்ந்து ராணிப்பேட்டை அம்மூர் கல்மேல் குப்பத்தில் போலீசார் அனுமதியுடன் அறிமுக கூட்டம் நடந்தது. அப்போது நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் சல்மான் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு திமுகவை சேர்ந்த சிலர் கூட்டத்தை இடையில் நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அதே நேரத்தில் மேடை மீது கல் வீசியதாகவும் கூறப்படுகிறது. இதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் இரு தரப்பினரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இந்நிலையில் ராணிப்பேட்டை எஸ்.பி. அலுவலகத்தில் எம்.பி. வேட்பாளர் அப்ஷியா நஸ்ரின், வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் கற்களை வீசிய மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுப்பதோடு தனக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் எனக் கூறி புகார் மனு அளித்துள்ளார். இந்த சம்பவம் ராணிப்பேட்டையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story