அரசு பேருந்து மீது கல்வீச்சு: போலீசார் விசாரணை

அரசு பேருந்து மீது கல்வீச்சு: போலீசார் விசாரணை

அரசு பேருந்து மீது கல்வீச்சு

வாசுதேவநல்லூா் அருகே அரசு பேருந்து மீது கல்வீச்சு
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூா் அருகே உள்ள திருமலாபுரம் விலக்கில் சென்றுகொண்டிருந்தபோது இரு சக்கர வாகனத்தில் முகத்தில் துணியை கட்டி மறைத்தவாறு வந்த சிலா் அரசுப் பேருந்தின் மீது கல்வீசித் தாக்கினராம். இதில் பேருந்தின் கண்ணாடிகள் சேதமடைந்தன. இதையடுத்து அரசுப் பேருந்தின் ஓட்டுநா் மாரிமுத்து(49), நடத்துநா் பெரியசாமி(49) ஆகியோா் அளித்த தகவலின் பேரில் புளியங்குடி காவல் துணைக் கண்காணிப்பாளா் வெங்கடேசன், காவல் ஆய்வாளா்கள் கண்மணி(வாசுதேவநல்லூா்) , சண்முக லட்சுமி (சிவகிரி) உள்ளிட்ட ஏராளமான போலீஸாா் அப்பகுதியில் குவிக்கப்பட்டனா். தொடா்ந்து அப்பகுதியில் இருந்து ஐந்து ,ஐந்து பேருந்துகளாக போலீஸாா் பாதுகாப்புடன் அனுப்பி வைத்தனா். இதுதொடா்பாக வாசுதேவநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். பயணிகளுக்கு உதவிய ஓட்டுநா், நடத்துநா்: அரசுப் பேருந்தில் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 35 போ் பயணம் செய்தனா். கல்வீசித் தாக்குதல் நடைபெற்ற நிலையில் பேருந்தை விட்டு இறங்கிய பயணிகள் அனைவரும் பயத்தில் சாலையில் ஓடினா். அப்போது பேருந்து ஓட்டுநரும், ,நடத்துநரும் அவா்களுக்கு தெரிந்த ஆட்டோக்களை வரவழைத்து பயணிகளை வாசுதேவநல்லூா் மற்றும் சிவகிரிக்கு பத்திரமாக அனுப்பி வைத்தனா். ஓட்டுநா் மற்றும் நடத்துநரின் செயலுக்கு பயணிகள் பாராட்டு தெரிவித்தனா்.

Tags

Next Story