கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் மீது கல்வீச்சு - பயணி படுகாயம்

கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் மீது கல்வீச்சு - பயணி படுகாயம்

கல்வீச்சில் உடைந்த கண்ணாடி 

ஆரல்வாய்மொழி அருகே கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் மீது மர்ம நபர்கள் கல் வீசியதில் பயணி ஒருவர் படுகாயமடைந்தார். நெல்லை, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர் ரயில்வே ஸ்டேஷன்களில் மருத்துவ வசதி இல்லாததால் காயமடைந்த பயணி மதுரை ரயில் நிலையத்தில் தான் சிகிச்சை பெற முடிந்தது.

கன்னியாகுமரியில் இருந்து சென்னை செல்லும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் நேற்று முன்தினம் (16-ம் தேதி) மாலை 6:45 மணியளவில் ஆரல்வாய்மொழி பகுதியில் கடந்து சென்று கொண்டிருந்தது. அப்போது மர்ம நபர்கள் சிலர் ரயில் மீது கல்வீசி உள்ளனர். இதில் முன்பதிவு பெட்டியில் இருந்த பயணி ஒருவர் காயமடைந்தார். அவருக்கு உடனே மருத்துவ உதவி கிடைக்கவில்லை. டிக்கெட் பரிசோதனை செய்பவரிடம் முதலுதவி கேட்டும் அவர் திருநெல்வேலியில் முதலுதவி கிடைக்கும் என்று சொன்னார். ஆனால் திருநெல்வேலியில் சரியான மருத்துவ வசதி இல்லை என்று சொல்லி விட்டனர். ரயிலும் கிளம்பி விட்டது.

அடுத்த ஸ்டேஷனில் உதவி கேட்டனர். அதற்கு டிக்கெட் பரிசோதகர் கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர் ஸ்டேஷன்களில் மருத்துவ உதவி இல்லை என்று சொன்னார். மதுரையில் மட்டுமே கிடைக்கும் என்று சொன்னார். அதன் பிறகு மதுரையில் காயம் அடைந்த பயணி மருத்துவ உதவி பெற்றார். ரயிலில் உடைந்த கண்ணாடி துண்டுகள் பயணிகள் இருக்கும் இடத்திலேயே சிதறி கிடந்தன. அதை சுத்தம் செய்வதற்கு டிக்கெட் பரிசோதரிடம் கூறிய பிறகு ரயில்வே துறையில் இருந்து யாரும் வரவில்லை. கடைசியில் திண்டுக்கல் சந்திப்பு வந்த பிறகுதான் சுத்தம் செய்தனர். ஒவ்வொரு ரயிலுக்கும் ஒரு மருத்துவ உதவி செய்ய மருத்துவர் நியமிக்கப்பட வேண்டும். ஒவ்வொரு ரயில் நிறுத்தங்களிலும் மருத்துவ உதவி நிலையம் அமைக்க வேண்டும் என்று பயணிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags

Next Story