கல்குவாரி நீரில் மூழ்கிய சிறுவன் உடல் மீட்பு

கல்குவாரி நீரில் மூழ்கிய சிறுவன்  உடல் மீட்பு

உடல் மீட்பு 

கல்குவாரி கிடங்கில் குளிக்கச் சென்று நீரில் மூழ்கி உயிரிழந்த சிறுவனின் உடல் சுமார் 42 மணி நேரத்திற்குப் பின் மீட்கப்பட்டது.

அருப்புக்கோட்டை அருகே கல்லூரணி கிழக்கு தெருவை சேர்ந்தவர் லட்சுமணன் என்பவரது மகன் காளிமுத்து(17). லட்சுமணன் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டதால் காளிமுத்து அவரது தாய் மகேஸ்வரி பராமரிப்பில் இருந்து வந்தார்.‌ மகேஸ்வரி மருத்துவப் பணியாளராக இருந்து வருகிறார்.‌ சிறுவன் காளிமுத்து ஒன்பதாம் வகுப்பு முடித்துவிட்டு அதற்கு மேல் படிக்காமல் வீட்டில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் சிறுவன் காளிமுத்து நேற்று முன் தினம்(மே6) மாலை வெளியே செல்வதாக கூறிச் சென்றவர் இரவு வெகு நேரமாகியும் வீடு திரும்ப வில்லை. அவரது உறவினர்கள் அவரை பல இடங்களில் தேடி உள்ளனர்.

நேற்று(மே7) காலை வரை சிறுவன் வீடு திரும்பவில்லை என்பதால் சிறுவனின் நண்பர்களிடம் விசாரித்தபோது சிறுவன் காளிமுத்து நேற்று முன்தினம் மாலை 3 மணி அளவில் அப்பகுதியில் உள்ள கல்குவாரி கிடங்கில் குளிக்க சென்றதாக கூறியுள்ளனர்.‌ இதனை அடுத்து உடனடியாக அங்கு சென்று பார்த்த போது சிறுவனின் செருப்பு மற்றும் உடைகள் கிடங்கு தண்ணீர் அருகே இருந்துள்ளது. இதனை அடுத்து சிறுவன் காளிமுத்து நீரில் மூழ்கிய உயிரிழந்திருக்கலாம் என உடனடியாக அருப்புக்கோட்டை தீயணைப்பு துறைக்கும், ம.ரெட்டியபட்டி போலீஸாருக்கும் தகவல் தெரிவித்தனர்.

விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் கிடங்கில் தேங்கியுள்ள நீரில் இறங்கி சிறுவன் காளிமுத்துவின் உடலை தேடினர் ஆனால் நீண்ட நேரம் ஆகியும் அவரது உடல் கிடைக்கவில்லை. இரவு பகலாக தேடுதல் நடைபெற்று வந்த நிலையில் தூத்துக்குடியில் இருந்து முத்துக்குளிக்கும் தொழிலாளர்கள் வரவழைக்கப்பட்டு அவரது உடலை மீட்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் நேற்று திடீரென சிறுவன் காளிமுத்துவின் உடல் தானாக மேலே வந்து தண்ணீரில் மிதந்தது.‌ அவரது உடலை மீட்ட தீயணைப்புத் துறையினர் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.‌ சுமார் 42 மணி நேரத்திற்கு பின் நேரில் மூழ்கி உயிரிழந்த சிறுவனின் உடல் மீட்கப்பட்டது. மேலும் போலீசார் இது குறித்து வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.‌

Tags

Next Story