வெடி விபத்து ஏற்பட்ட கல்குவாரி உரிமம் ரத்து

வெடி விபத்து ஏற்பட்ட   கல்குவாரி  உரிமம் ரத்து

காரியாபட்டி அருகே டி. கடம்பன் குளம் கிராமத்தில் வெடி விபத்து ஏற்பட்ட கல்குவாரி உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

காரியாபட்டி அருகே டி. கடம்பன் குளம் கிராமத்தில் வெடி விபத்து ஏற்பட்ட கல்குவாரி உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே டி. கடம்பன் குளம் கிராமத்தில் மே 1ம் தேதி கல்குவாரி இதில் மூன்று தொழிலாளிகள் உயிரிழந்தனர் இது தொடர்பாக ஆவீர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் எஸ் எஸ் பி ஆர் டிரேடர்ஸ் என்ற வெடிபொருள் சேமிப்பு கிடங்கின் உரிமையாளர் ராஜ்குமார் உட்பட நான்கு நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் வெடிபொருள் சேமிப்பு கிடங்கிற்கு வழங்கப்பட்டுள்ள எல்இ3 உரிமத்தை சென்னை இணை முதன்மை வெடிபொருள் கட்டுப்பாட்டு அலுவலர் கடந்த மே இரண்டாம் தேதி முதல் முன்னிறுத்தம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

அதேபோல் வெடிப்பு பற்றி ஏற்பட்ட இடத்திற்கு அருகே ஆவியூரைச் சார்ந்த சேது என்பவருக்கு உட்பட்ட கல்குவாரி அமைந்துள்ளது அந்த கல்குவாரியில் அதிக அளவு கனிமங்கள் எடுக்கப்பட்டதாக புகார் வரப்பட்டதை எடுத்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் சுரங்கத் திட்டத்தின் படி குவாரிப்பணிகள் மேற்கொள்ளாத மேற்கொள்ளப்படாத காரணத்தினாலும், விதிமீறல்கள் கண்டறியப்பட்ட தன் அடிப்படையிலும் மே நான்காம் தேதி முதல் குவாரியின் பணிகளும் நிறுத்தி வைக்கப்படுவதாக மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் அவர்கள் உத்தரவிட்டுள்ளார் .

மேலும் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து குவாரி உரிமைதாரர்களும் சட்ட மற்றும் விதிகளுக்கு உட்பட்டு குவாரிப்பணியில் ஈடுபட வேண்டும் என்றும் அதேபோல் குவாரி ஆய்வு செய்ய வரும் அலுவலர்களுக்கு குவாரி பதிவேடுகள் மற்றும் உரிமம் தொடர்பான ஆவணங்களை அளித்து ஆய்விற்கு உரிய ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார் சட்ட மற்றும் விதி விதிகளை மீறி செயல்படும் குவாரி புத்தகதாரர்கள் மீது தமிழ்நாடு சிறு கனிம சலுகை விதிகளின்படி அபராத நடவடிக்கைகள் மேற்கொள்ள மேலும் குவாரி உரிமங்கள் ரத்து செய்யப்படுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என குத்தகைதாரர்களுக்கு ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்

Tags

Next Story