கல்குவாரி வெடி விபத்து : முதல் தகவல் அறிக்கை வெளியீடு

கல்குவாரி  வெடி விபத்து : முதல் தகவல் அறிக்கை வெளியீடு
காவல் நிலையம் 
எலெக்ட்ரிக் டெட்டனேட்டர் இருந்த வெடிமருந்து வேனையும், நைட்ரேட் மிக்சர் வெடிமருந்து இருந்த லோடு வேனையும் அருகருகே வைத்து லோடு இறக்கியதாலும், ஏற்றியதாலும் வெடிவிபத்து ஏற்பட்டு இருப்பதாக ஆவியூர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கின் முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே இருக்கக்கூடிய ஆவியூர் கிராமத்தில் நேற்று குவாரியில் வெடி பொருளை குடோனில் இருந்து மற்ற கல் குவாரிகளுக்கு சப்ளை செய்ய தவறுதலாக கையாளும் பொழுது ஏற்பட்ட வெடி விபத்தில் குருசாமி, துரை மற்றும் கந்தசாமி ஆகிய மூன்று தொழிலாளர்கள் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். வெடி விபத்தை தொடர்ந்து ஆவியூர் சுற்றுவட்டார பகுதியில் உள்ள கிராமங்களில் இருந்த 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் விரிசல் மற்றும் சேதம் ஏற்பட்டது. இது தொடர்பாக ஆவியூர் காவல் நிலையத்தில் டி. கடம்பங்குளம் கிராம நிர்வாக அலுவலர் செல்வராஜ் அளித்த புகாரின் படி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது .

அதன் முதல் தகவல் அறிக்கை தற்போது வெளியாகி அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது மனித உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று தெரிந்திருந்தும் போதிய பாதுகாப்பு உபகரணங்கள் ஏதும் கொடுக்காமல் உயர்ரக வெடிமருந்துகள் இறக்கும் இடத்தில் போதிய கண்காணிப்பு செய்யும் அலுவலர் இல்லாமலும் எலெக்ட்ரிக் டெட்டனேட்டர் இருந்த வெடிமருந்து வேனையும் நைட்ரேட் மிக்சர் வெடிமருந்து இருந்த லோடு வேனையும் அருகருகே வைத்து லோடு இறக்கினாலோ ஏற்றினாலோ வெடிவிபத்து ஏற்பட்டு உயிர் சேதத்தை விளைவிக்கும் என்று தெரிந்திருந்தும் அஜாக்கிரதையாகவும் கவனக்குறைவாகவும் மேற்படி வெடிமருந்துகளை போதிய பாதுகாப்பு செய்து கொடுக்காமல் வெடிமருந்து குடோனில் வேலை செய்ததால் வெடிவிபத்து ஏற்பட்டு அதன் காரணமாக வெடிமருந்து குடோனில் வேலை செய்த 3 நபர்கள் இறக்க காரணமாக இருந்த மேற்படி வெடிமருந்து குடோனை முறையாக நிர்வகிக்காத அதன் உரிமையாளர் ராஜ்குமார் ஆர்எஸ்ஆர் கிரஷரை முறையாக நிர்வகிக்காத அதன் உரிமையாளர்களான ராம்ஜி மற்றும் சேது மேலும் குவாரியை மேற்பார்வை செய்து வந்த ராமமூர்த்தி ஆகியோர் மீது காவல்துறையினர் மூன்று பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதில் ராஜ்குமார், சேது ஆகியோர் கைது செய்யப்பட்ட நிலையில் ராம்கி மற்றும் ராமமூர்த்தி ஆகியோர் தலைமறைவாகியுள்ளனர்.

Tags

Next Story