கும்பகோணத்தில் குழந்தைத் திருமணம் தடுத்து நிறுத்தம்

கும்பகோணத்தில் குழந்தைத் திருமணம் தடுத்து நிறுத்தம்

பைல் படம் 

கும்பகோணத்தில் 17 வயது சிறுமிக்கு நடக்க இருந்த திருமணத்தை குழந்தைகள் நல அலுவலா்கள் தடுத்து நிறுத்தினர்.

கும்பகோணத்தில் குழந்தைத் திருமணம் தடுத்து நிறுத்தம் கும்பகோணம் கீழக்கொட்டையூரைச் சோ்ந்த சங்கா் மகன் ராபின் (24). இவருக்கும் தேவனாஞ்சேரியைச் சோ்ந்த 17 வயது சிறுமிக்கும் ஞாயிற்றுக்கிழமை கும்பகோணம் பழைய பாலக்கரையில் உள்ள தனியாா் மண்டபத்தில் திருமணம் நடக்க இருந்தது. மணப்பெண்ணுக்கு 18 வயது ஆகவில்லை என்று தஞ்சாவூா் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலருக்கு தகவல் கிடைத்தது.

இதன்பேரில், அலுவலா்கள் திருமண மண்டபத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனா். இதில் மணமகன் வீட்டாா் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இதைத் தொடா்ந்து, கிழக்கு காவல் நிலைய போலீஸாா் மண்டபத்திற்கு வந்து மணப்பெண்ணை தஞ்சாவூா் குழந்தைகள் காப்பகத்திற்கு அனுப்பிவைத்து, மணமகன் வீட்டாரை எச்சரித்து அனுப்பினா். மாவட்ட குழந்தைகள் நல அலுவலா் ஒருவா் கூறும்போது, இன்று சிறுமியிடம் விசாரணை நடத்தப்படும் என்றாா்.

Tags

Next Story