புயல் மீட்பு பணி : சென்னை விரைந்த விழுப்புரம் தூய்மை பணியாளர்கள்.

புயல் மீட்பு பணி : சென்னை விரைந்த விழுப்புரம்  தூய்மை பணியாளர்கள்.

தூய்மை பணியாளர்கள் 

வங்கக்கடலில் உருவான மிக்ஜம் புயல் காரணமாக சென்னையில் கனமழை கொட்டித்தீர்த்தது. எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக் கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். சில இடங்களில் உணவு, குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கூட கிடைக் காமல் மக்கள் தவித்து வருகின்றனர். மேலும் தேங்கி நிற்கும் மழைநீரால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயமும் உருவாகியுள்ளது. இந்த பாதிப்புகளில் இருந்து சென்னை மக்களை மீட்டெடுக்கும் வகையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மீட்புக்குழு சென்னைக்கு விரைந்துள்ளது, அந்த வகையில் சென்னையில் மழை வெள்ள மீட்பு பணி மற்றும் தூய்மைப்பணி மேற்கொள்வதற்காக விழுப்புரம் நகராட்சியில் இருந்து 2 துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள் தலைமையில் 30 தூய்மைப்பணியாளர்கள் 2 சரக்கு வாகனங்கள் மற்றும் தளவாட பொருட்களுடன் சென்னைக்கு விரைந்துள்ளனர். அவர்களை நகராட்சி ஆணையர் ரமேஷ் உள்ளிட்ட அதிகாரிகள் வழியனுப்பி வைத்தனர்.

Tags

Next Story