இடியுடன் பெய்த மழை கழிவுநீருடன் மழைநீர் கலப்பு

இடியுடன் பெய்த மழை கழிவுநீருடன் மழைநீர் கலப்பு

கழிவுநீருடன் மழைநீர் கலப்பு

காஞ்சிபுரம் நகரில் ஆறாக மழைநீர் ஓடியதால், வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு தங்களது வாகனங்களை இயக்கினர்
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்ததது. இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில், காலை முதலே விட்டு விட்டு மழை பெய்தது. காஞ்சிபுரம் மற்றும் அதனை சுற்றிய கிராமப்புறங்களில், பிற்பகல் 2:00 மணிக்கு, திடீரென, இடியுடன் கனமழை பெய்தது. ஒரு மணி நேரம் நீடித்த கனமழை காரணமாக, நகரின் பெரும்பாலான சாலைகளில், மழைநீர் ஆறாக ஓடியது. காஞ்சிபுரம் ரங்கசாமிகுளம், காமராஜர் சாலை ஆகிய பகுதிகளில் மழைநீருடன் கழிவுநீரும் கலந்ததால், துர்நாற்றம் வீசியது. செங்கல்பட்டு செல்லும் சாலையில், பெரியார் நகரில், சாலையோரம் அமைக்கப்பட்ட மழைநீர் கால்வாய் நிரம்பி, அருகில் உள்ள வீடுகளுக்குள் புகுந்தது. காஞ்சிபுரம் நகரில் ஆறாக மழைநீர் ஓடியதால், வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு தங்களது வாகனங்களை இயக்கினர்.

Tags

Next Story