சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் சார்பில் கதை சொல்லும் நிகழ்வு
கோவில்பட்டியில் தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் சார்பில் கதை சொல்லும் நிகழ்வு நடைபெற்றது.
தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் கோவில்பட்டி கிளையின் சார்பில் பள்ளிக் குழந்தைகள் கதை சொல்லும் நிகழ்வு கி.ரா. மணிமண்டப வளாகத்தில் நடைபெற்றது. கிளைச் செயலர் பிரபு தலைமை ஏற்று அனைவரையும் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக சிறுகதை எழுத்தாளர் ராஜலட்சுமி நாராயணசாமி கலந்து கொண்டார்.
மேனாள் வேளாண்-அறிவியல்கல்வி தொழிற்கல்வி ஆசிரியர் சுரேஷ்குமார் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் வடக்கு திட்டங்குளம் ஊராட்சி ஒன்றிய நடு நிலைப் பள்ளி மாணவி மதுஸ்ரீ, மஞ்சுஸ்ரீ, மாணவர் கலைச்செல்வம், இலக்கமி ஆலை துவக்கப்பள்ளி (கிழக்கு ) மாணவி பேச்சியம்மாள், கோவில்பட்டி நாடார் காமராஜ் மெட்ரிக் பள்ளி மாணவர் கார்த்தி விக்னேஷ், கவுணியன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் கவின் கிருஷ்ணா, தருண் கிருஷ்ணா, சங்கரக்குமார் துவக்கப்பள்ளி மாணவர்கள் ஸ்ரீ ராஜமீரா, ஜெய சூர்யா, ஜெயபால் உட்பட பல்வேறு பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.
கதை சொல்லுதல், பாடல் பாடுதல், கவிதை கூறுதல் போன்ற நிகழ்வுகளில் கலந்து கொண்டு தங்களின் கவித் திறன்களை வெளிக்கொண்டு வந்து பாராட்டு மற்றும் புத்தக பரிசுகளைப் பெற்றனர். மண்டபத்தை பார்வையிட திடீர் வருகை தந்த ஈரோடு ஒவியர் சுந்தரன் ரூபாய் 200 வளர்ச்சி நிதி வழங்கி கதைகளை எடுத்துக் கூறிய பள்ளி மாணவ- மாணவியர்களை வாழ்த்தி பாராட்டினார். தொடர்ந்து ஆசிரியை மாரியம்மாள் மற்றும் பெற்றோர்கள் உட்பட பலர் மாணவர்களை பாராட்டினர். முடிவில் சங்கப் பொருளாளர் கண்ணகி நன்றி கூறினார்.