ஸ்டவ் வெடித்து தீக்காயம் - சிகிச்சை பலனின்றி பெண் உயிரிழப்பு
போலீசார் விசாரணை
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் கோட்டைமேடு காளியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் செல்வி, 40. விவசாய கூலி. இவர் கடந்த அக். 29ல் மாலை 05:00 மணியளவில் தன் வீட்டில் ஸ்டவ் பற்ற வைக்க முயற்சித்த போது, அது வெடித்து பலத்த தீக்காயமடைந்தார். அக்கம் பக்கம் உள்ளவர்கள் இவரை குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். மேல் சிகிச்சைக்காக ஈரோடு ஜி.ஹெச் இல் சேர்க்கப்பட்டார். சிகிச்சையில் இருந்த இவர் நேற்று காலை 06:00 மணியளவில் இறந்தார். இது குறித்து அவரது மகள் கனிஷ்கா அளித்த புகாரின் பேரில் குமாரபாளையம் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.
Tags
Next Story