சவடு மண் தட்டுப்பாட்டால் அடுப்பு தயாரிக்கும் பணிகள் பாதிப்பு
அடுப்பு தயாரிப்பு பணிகள்
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மண்பாண்ட தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். அகல்விளக்கு, அக்கினி சட்டி, கூஜா, அடுப்பு, சாமி சிலைகள், பொங்கல் பானை போன்றவற்றை தயாரித்து விற்பனை செய்கின்றனர். இங்கு தயாரிக்கப்படும் மண் பாண்டங்கள் சிவகங்கை மாவட்டம் மட்டுமின்றி மதுரை, ராமநாதபுரம், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களுக்கு விற்பனைக்காக அனுப்பப்படுகிறது.
மீண்டும் பழமைக்கு திரும்பும் வகையில் சமீபகாலமாக பொங்கல் பண்டிகைக்கு மண் அடுப்பு, மண்பானை பயன்படுத்தும் பழக்கம் அதிகரித்து வருகிறது. தற்போது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மண்ணடுப்பு தயாரிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வெளியூர் வியாபாரிகளிடம் இருந்து ஆர்டர்களும் குவிந்து வருகின்றன. ஆனால் மண் மற்றும் சவடு மண் தட்டுப்பாடு காரணமாக மண் அடுப்பு தயாரிப்பு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மண்பாண்ட தொழிலாளர்கள் கவலை அடைந்துள்ளனர்