தஞ்சாவூரில் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம்

தஞ்சாவூரில் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம்

தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம்

தஞ்சை கீழவாசல் பகுதியில் மார்ச்.1 இல் தொடங்கி, மாவட்டம் முழுவதும் தெருமுனை பிரசாரக் கூட்டம் : சிறுபான்மை மக்கள் நலக்குழு முடிவு.
தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு, மாவட்ட நிர்வாகிகள் கூட்டம், மாவட்டத் தலைவர் பி.எம்.காதர் உசேன் தலைமையில் தஞ்சாவூர் சரோஜ் நினைவகத்தில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. மாநிலச் செயலாளர் பி.செந்தில்குமார், மாவட்டச் செயலாளர் என்.குருசாமி, மாவட்டப் பொருளாளர் ஹெச்.அப்துல் நசீர், மாவட்ட துணைத் தலைவர் ஜாஹிர் உசேன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில், 'அரசியல் அமைப்புச் சட்டத்தை பாதுகாப்போம், மக்கள் ஒற்றுமையைக் கட்டிக் காப்போம்' என்ற முழக்கத்தை முன் வைத்து, மாநிலம் முழுவதும் நடைபெற்று வரும் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, வரும் மார்ச்.1 ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை, தஞ்சாவூர் கீழவாசல் ஆட்டுமந்தை தெருவில் தெருமுனை பிரச்சாரக் கூட்டம் நடத்துவது, கும்பகோணம், பட்டுக்கோட்டை, மாவட்டத்தின் மற்ற பகுதிகளிலும் இதேபோல் தெருமுனை பிரச்சாரக் கூட்டம் நடத்துவது எனவும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி தலைமையில், வெறுப்பு அரசியலை அம்பலப்படுத்துவோம், மக்கள் ஒற்றுமையை பாதுகாப்போம் என வலியுறுத்தி, தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுகா, அய்யம்பேட்டை - சக்கராப்பள்ளி முதல் பாபநாசம் வரை மார்ச்.9 ஆம் தேதி நடைபெறவுள்ள சுமார் 8 கி.மீ தூர நடைபயணத்தில், சிறுபான்மை மக்களை பெருமளவு பங்கேற்கச் செய்வது" என முடிவு செய்யப்பட்டது.

Tags

Next Story