திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் தெருமுனைப் பிரச்சார இயக்கம்
திருப்பூர் குமரன் சிலை அருகே திராவிட விடுதலை கழகம் சார்பில் தெருமுனைப் பிரச்சார இயக்கம் நடைபெற்றது.
திருப்பூரில் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் சர்வாதிகாரத்தை வீழ்த்துவோம் , சமூக ஒற்றுமையை காப்போம் என்ற தலைப்பில் தெருமுனைப் பிரச்சார இயக்கம் நடைபெற்றது. நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதை முன்னிட்டு திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தெருமுனைப் பிரச்சார இயக்கம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக சர்வாதிகாரத்தை வீழ்த்துவோம் சமூக ஒற்றுமையை பாதுகாப்போம் என்ற தலைப்பில் தெருமுனைப் பிரச்சார இயக்கத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திருப்பூர் குமரன் நினைவகம் முன்பாக தெருமுனைப் பிரச்சார இயக்கத்தில் ஈடுபட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தினர் பாஜக அரசை தோற்கடிக்க வேண்டியதன் அவசியம் குறித்து பிரச்சாரம் மேற்கொண்டனர்.
Next Story