அதிகரிக்கும் நாய்கள் தொல்லை - பொதுமக்கள் அச்சம்
பைல் படம்
பழநியில் அதிகரிக்கும் நாய்கள் தொந்தரவினால் பொதுமக்களால் அச்சமடைந்துள்ளனர்.
பழநி நகரில் 33 வார்டுகள் உள்ளன. 1 லட்சத்திற்கும் அதிகமானோர் வசித்து வருகின்றனர். தவிர, பழநி கோயிலுக்கு சராசரியாக 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து செல்கின்றனர். கடந்த சில தினங்களாக பழநி பகுதியில் தெருநாய்களின் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. நடந்து செல்வோர், பைக்குகளில் செல்வோரை நாய்கள் விரட்டி, விரட்டி கடித்து வருகின்றன.
நகரின் பல்வேறு இடங்களில் தெருவிளக்குகள் எரியாத நிலையில், தெருநாய்களின் தொந்தரவால் பொதுமக்கள் கடும் அவஸ்தைக்கு ஆளாகி உள்ளனர்.நகர் முழுவதும் நாய்கள் கூட்டம் கூட்டமாக, சுற்றித்திரிந்து வருவதால் மக்கள் வெளியில் நிம்மதியாக நடமாட சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. நாய்கடிக்கு ஆளாகி மருத்துவமனைக்கு வருபவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Tags
Next Story