அவனியாபுரம்: கொடூரமாக சண்டையிட்டுக் கொண்ட தெரு நாய்கள்
தெருநாய்க்ள் தொல்லை
மதுரை மாநகர் அவனியாபுரம் பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒவ்வொரு புதன்கிழமையும் தாய்மார்கள் தங்களது ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவதற்காக அரசு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வருவார்கள்.
இந்த நிலையில் இந்த மருத்துவமனையை சுற்றியும் ஐந்துக்கும் மேற்பட்ட வெறி நாய்கள் தினமும் சுற்றி வருகிறது. இதனால் நாங்கள் அச்சம் அடைந்து வருகிறோம் என்றும் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் இன்று காலை மருத்துவமனை வாயிலில் திடீரென இரண்டு தெரு நாய்கள் ஒன்றுக்கு ஒன்று கொடூரமாக தாக்கிக் கொண்டது.
அங்கிருந்த பொதுமக்கள் கற்களை வீசியும் தண்ணீர் தெளித்தும் சண்டையிட்டு கொண்ட நாயை அப்புறப்படுத்த முயன்றனர். அப்போதும் அந்த நாய்கள் பத்து நிமிடங்களுக்கு மேல் கொடூரமாக சாலையில் ஒன்றுக்கு ஒன்று கடித்துக் கொதறி சண்டையிட்டுக் கொண்டது. இது பகுதியில் அச்சத்தையும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மதுரை மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நகர் பகுதிகளில் சுற்றித் திரியும் வெறி நாய்களை பிடித்து செல்ல வேண்டும். குறிப்பாக மருத்துவமனைகள் அருகே சுற்றித் திரியும் நாய்களை உடனடியாக பிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெண்களும் தாய்மார்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.