சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் வீதி உலா
சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயண சாமி திருக்கோவில் சித்திரை திருவிழா முன்னிட்டு 8ம் நாளான இன்று காலையில் ஸ்ரீ நடராஜ பெருமான் பச்சை சாத்தி வெள்ளி சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா நடைபெற்றது. இதில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகங்களும் அலங்காரங்களும் தீபாரதனையும் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Next Story