வதந்திகளை பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை !

X
காவல் கண்காணிப்பாளர் மரு.கி.கார்த்திகேயன்
வதந்திகளை பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை - மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரிக்கை.
வதந்திகளை பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரிக்கை. சமீப காலமாக வடமாநிலத்தவர்கள் குழந்தைகளை கடத்த முயற்சிப்பது போன்ற பொய்யான காணொளிகளை சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருவதை காண முடிகிறது. போலியான செய்திகளை கேட்டும், காணொளிகளை பார்த்தும் பொதுமக்கள் துளியும், அச்சப்படவோ, பதட்டம் அடையவோ தேவையில்லை இது சம்பந்தமாக பொதுமக்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருப்பின் அல்லது உதவி தேவைப்பட்டால் திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை உதவி எண் 8903340840 அல்லது 100-க்கு அழைக்கவும் மற்றும் உதவிக்கு அருகாமையில் உள்ள காவல் நிலையங்களை அனுகி உதவி பெறலாம். மேலும் தேவையற்ற வதந்திகளை பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம் எனவும், வதந்திகளை மற்றவர்களுக்கு பகிரவோ, சமூக வலைதளங்களில் பரப்பவோ வேண்டாம் என திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.கி.கார்த்திகேயன் அறிவுறுத்தியுள்ளார்.
Next Story
