காலாவதியான உரங்களை விற்றால் கடும் நடவடிக்கை
காலாவதியான உரங்களை விற்பனை செய்தால், உரிமம் ரத்து செய்யப்படும் என திண்டுக்கல் வேளாண்துறை தரக் கட்டுப்பாடு உதவி இயக்குநர் ராஜேஸ்வரி தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்ட வேளாண்மை துறை மற்றும் உழவர் நலத்துறை சார்பில், தகவல் மற்றும் தர கட்டுப்பாடு பிரிவின் கீழ் விவசாயிகளுக்கு சரியான விலையில், சரியான அளவில், உரங்கள் சரியான நேரங்களில் கிடைக்கிறதா என்பதை உறுதி செய்யும் பொருட்டு, அவ்வப்போவது ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன் அடிப்படையில் நேற்று திண்டுக்கல் மாவட்டம் தொப்பம்பட்டி வட்டாரத்தில் உள்ள உர சில்லறை விற்பனை கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அனுமதி இல்லாத உரம் மற்றும் பூச்சிக்கொல்லிகளை விற்பனை செய்யக் கூடாது. இவ்விதிமுறைகளை மீறும் உரக்கடைகளின் மீது உரக்கட்டுப்பாட ஆணை 1985 மற்றும் பூச்சிச்கொல்லி சட்டம் 1968ன் படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு ஆய்வின்போது தொப்பம்பட்டி வேளாண்மை அலுவலர் அப்துல் காதர் ஜெய்லானி உடன் இருந்தார்.