வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை - எஸ்பி எச்சரிக்கை
எஸ் பி ஹர்ஷ் சிங்
நாகை மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக வட இந்திய இளைஞர்கள் இரண்டு பேர் குழந்தைகளை கடத்துவதாக சமூக வலைதளங்களில் காட்டுத் தீயாய் வதந்தி பரவியது பெற்றோர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்திய இந்த வதந்தியால் பல பெற்றோர் தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பவே அச்சமடைந்து வந்தனர்.
மேலும் வாட்சப் குரூப் களிலும் பல போலி வீடியோகள் வாய்ஸ் மெசேஜ்கள் பரவி ஒரு சிலர் அதனை ஸ்டேட்டஸ் ஆகவும் வைத்து இருந்தனர் நாகை மாவட்டம் முழுவதும் மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த குழந்தை கடத்தல் வதந்திக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ்சிங் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இது தொடர்பாக அவசர அவசரமாக செய்தியாளர்களை சந்தித்த எஸ் பி வாட்ஸாப்ளில் பரவிய வீடியோ மற்றும் வாய்ஸ் மெசேஜ்களை செய்தியாளர்களுக்கு காண்பித்து அவைகள் தமிழ்நாட்டில் எங்கெங்கும் நடைபெறாத சம்பவங்கள் என்றும் பல்வேறு எடிட்டிங் செய்யப்பட்டு பரப்பப்படும் வதந்தி என விளக்கிக் கூறினார்.
பின்னர் பெற்றோர்களுக்கும் பொதுமக்களுக்கும் விடுத்த வேண்டுகோளில் குழந்தை கடத்தல் சம்பவம் நாகை மாவட்டத்தில் எங்கும் நடைபெறவில்லை என்றும் போலியாக பரப்பப்பட்டு வரும் வீடியோக்களை நம்ப வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார் சமூக வலைதளங்களில் வதந்தியை பரப்பிய ஐந்து பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் பெற்றோர்களும் ஆசிரியர்களும் வதந்தியை நம்ப வேண்டாம் என்றும் இது குறித்த புகார்களுக்கு காவல்துறையை நேரடியாக அணுகலாம் என்றும் தெரிவித்தார்.