போதை பொருட்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை: நாகை கலெக்டர்

போதை பொருட்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை: நாகை கலெக்டர்


நாகப்பட்டினம் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் எச்சரித்துள்ளார்.


நாகப்பட்டினம் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் எச்சரித்துள்ளார்.

|நாகப்பட்டினம் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை / நிகோட்டின் கலந்த பான்மசாலா, குட்கா மற்றும் கூல் லிப் போன்ற உணவு பொருட்களை விற்பனை செய்யும் உணவு வணிகர்கள் மீது கடும் நடவடிக்கை, எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ், எச்சரிக்கை உணவு பாதுகாப்பு துறை பான்மசாலாவுடன் புகையிலை / நிகோட்டின் கலந்த உணவு பொருட்கள் விற்பனைக்கு 2013 முதல் தடை விதித்துள்ளது. அதனை தொடர்ந்து வருடந்தோறும் உத்தரவு தொடர்ந்து அமலாக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நமது நாகப்பட்டினம் மாவட்டத்தில் கடந்த மூன்று மாதங்களில் மட்டும் 56 நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு 102 காவல் துறை வழக்குகள் பதியப்பட்டு 158 கடைகள் மூடி சீல் வைக்கப்பட்டு ரூ.8.65,000/- ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து அரசு புதிய திருத்தப்பட்ட அபராத தொகையும் மற்றும் கடைகள் மூடுவதற்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

அவை பான்மசாலாவுடன் புகையிலை / நிகோட்டின் கலந்து ஒரே பொட்டலமாக "குட்கா" என்றோ அல்லது பான்மசாலா பாக்கெட்டுகளுடன் புகையிலை மற்றும் / அல்லது நிகோட்டின் பாக்கெட்டுகளை தனித்தனியாகவோ அல்லது உணவு சேர்மங்கள் சேர்க்கப்பட்ட புகையிலையோ தயாரிப்பது, போக்குவரத்து செய்வது, இருப்பு வைப்பது மற்றும் விற்பனை செய்வது தமிழ்நாட்டில் தடைசெய்யப்பட்டுள்ளது. மேலும் அக்குற்றங்களுக்கான அபராதமும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு நாகை மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story