விசைத்தறி தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்

விசைத்தறி தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்
 சங்கரன்கோவில் தாலுகா அலுவலகத்தில் கூலி உயர்வு கோரி விசைத்தறி தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சங்கரன்கோவில் தாலுகா அலுவலகத்தில் கூலி உயர்வு கோரி விசைத்தறி தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் மற்றும் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 5,000-க்கு மேற்பட்ட விசைத்தறி கூடங்களில் 15 ஆயிரம் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள், விசைத்தறி தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு கேட்டு 15 நாட்களாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். விசைத்தறி தொழிலாளர்கள் கூலி உயர்வு கேட்டு சங்கரன்கோவில் தாலுகா அலுவலகத்தில் நடைபெற்ற சமாதான கூட்டத்தில் எந்தவித உடன்பாடும் ஏற்படவில்லை. மேலும் விசைத்தறி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம், சாலை மறியல், காத்திருப்பு போராட்டம் உள்ளிட்ட போராட்டங்கள் நடத்தியும் எந்த பலனும் இல்லை. இந்நிலையில் இன்று விசைத்தறி தொழிலாளர் சங்கம் சார்பில் சங்கரன்கோவில் லட்சுமிபுரம் 4-ம் தெருவில் இருந்து தொடங்கிய பேரணியாக நடந்து சங்கரன்கோவில் தாலுகா அலுவலக வளாகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் ஏராளமான விசைத்தறி தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். 15 நாட்கள் நடைபெற்ற வேலை நிறுத்த போராட்டத்தால் சங்கரன்கோவில் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 11 கோடி மதிப்பிலான துணி உற்பத்தி பாதிக்கப்பட்டது.

Tags

Next Story