தார் கலவை ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி கடையடைப்பு
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே தேவாலா பகுதியில் தனியாருக்கு சொந்தமான தார் கலவை இயந்திர ஆலை செயல்ப்பட்டு வருகிறது. இந்த ஆலையிலிருந்து வெளியேறும் புகையினால் பொதுமக்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு நுரையீரல் பாதிப்பு உட்பட பல்வேறு நோய் உபாதைகள் ஏற்படுவதாக கூறி அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் தார் கலவை ஆலையை மூட வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்தும் பல்வேறு போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த நான்கு நாட்களாக போராட்டம் நடத்தி வரும் பொதுமக்கள் இன்று தார் கலவை ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி கடையடைப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.தேவாலா பகுதியில் உள்ள 500 க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.
Next Story