ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் பிப் 16ல் வேலைநிறுத்தம் மறியல்

ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் பிப் 16ல்  வேலைநிறுத்தம் மறியல்


மத்திய தொழிற்சங்கங்கள் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் பிப் 16ஆம் தேதி நடக்க உள்ள வேலைநிறுத்தம் மறியல், போராட்டத்தை விளக்கி பிரச்சார இயக்கம் நடைபெற்றது


மத்திய தொழிற்சங்கங்கள் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் பிப் 16ஆம் தேதி நடக்க உள்ள வேலைநிறுத்தம் மறியல், போராட்டத்தை விளக்கி பிரச்சார இயக்கம் நடைபெற்றது

27 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி மத்திய தொழிற்சங்கங்கள் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் பிப் 16ஆம் தேதி நடக்கஉள்ள வேலைநிறுத்தம் மறியல், போராட்டத்தை விளக்கி பிரச்சார இயக்கம் நடைபெற்றது.

இந்திய மக்கள் வாழ மோடி அரசு வீழ, தேசத்தை பாதுகாப்போம் மக்களை பாதுகாப்போம் என்ற கோரிக்கையுடன், 27 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி மத்திய தொழிற்சங்கங்கள் ஐக்கிய விவசாயிகள் முன்னணி இணைந்து வருகின்ற பிப்-16ஆம் தேதி நடைபெறக்கூடிய வேலைநிறுத்தம் மறியல் போராட்டத்தை விளக்கி பிரச்சார இயக்கம் CITU மாவட்ட செயலாளர் அகஸ்டின் தலைமையில் நடைபெற்றது, இந்த பிரச்சார இயக்கத்தை தமிழக விவசாய சங்கத்தின் மாநில செயலாளர் ராஜா சிதம்பரம் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் துவக்கி வைத்தார்.

இந்த பிரச்சார இயக்கத்தில் ஐக்கிய விவசாய முன்னனினுடைய மாவட்ட செயலாளர் செல்லத்துரை, Ait UC தொழிற்சங்க மாவட்ட நிர்வாகி முத்துசாமி, செல்லதுரை, LPF தொழிற்சங்கத்தின் மாவட்ட பொருளாளர் செல்வராஜ், மாவட்ட கவுன்சில் செயலாளர் ரெங்கசாமி, மக்கள் அதிகாரத்தினுடைய மாவட்ட நிர்வாகி காவேரி நாடான், அலெக்ஸ் , STU சுதந்திர தொழிலாளர் சங்கத்தினுடைய மாவட்ட செயலாளர் மாலிக் பாஷா, மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட துணை தலைவர் சபியுல்லா, LPF தொழிற் சங்கத்தினுடைய மாவட்ட பொறுப்பாளர் ஜெயராஜ் ஆகியோர்கள் இந்த பிரச்சார இயக்கத்தில் கலந்து கொண்டனர்.

பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் துவங்கிய பிரச்சார இயக்கம் எசனை வாலிகண்டபுரம் பெரம்பலூர் ரோவர் ஆர்ச் ஆகிய இடங்களில் பிரச்சார இயக்கம் நடைபெற்றது.

Tags

Next Story