கிராம நிர்வாக அலுவலர்கள் காத்திருப்பு போராட்டம்!

கிராம நிர்வாக அலுவலர்கள் காத்திருப்பு போராட்டம்!

வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள்

கிராம நிர்வாக அலுவலர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் வட்டாட்சியர் அலுவலகம் தமிழ்நாடு கிராம உதவியாளர் சங்கத்தினர்- 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தின் முக்கிய கோரிக்கையாக முன்னாள் முதலமைச்சர் கலைஞரால் கொண்டுவந்த கிராம நிர்வாக உதயாளர் இறந்துவிட்டால் கருணை அடிப்படையில் வாரிசுதாரர்களுக்கு வேலை வழங்கப்படும் ஆணையை தற்போது உள்ள தமிழக முதலமைச்சர் கருணையே இல்லாமல் நிறுத்தப்பட்டதை கண்டித்தும்,

24 வருடமாக செயல்பட்ட இந்த அரசு ஆணையை திரும்பவும் செயல்படுத்திட கோரியும், மாற்றுத்திறனாளிகளாக இருக்கும் கிராம உதவியாளர்கள் பெற்று வந்த எரிபொருள் மாதபடி 2500 ரூபாயையும் தற்போது உள்ள தமிழக முதலமைச்சர் நிறுத்தியதற்கு நியாயம் கேட்டும் உள்ளிட்ட 14- அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம உதவியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags

Next Story