போதைப்பொருட்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை - ஆட்சியர் அறிவுரை

போதைப்பொருட்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை -  ஆட்சியர் அறிவுரை
ஆய்வு கூட்டம் 
விழுப்புரம் மாவட்டத்தில் சட்டம்- ஒழுங்கு பிரச்சினை மற்றும் போதைப்பொருட்களின் விற்பனை, கடத்தலை தடுப்பது தொடர்பான ஆய்வுக்கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் பழனி தலைமை தாங்கி பேசியதாவது:- விழுப்புரம் மாவட்டத்தில் எதிர்வரும் நாட்களில் சட்டம்- ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்படாதவண்ணம் காவல்துறை உள்ளிட்ட அனைத்துத்துறை அதிகாரிகளும் கண்காணித்து உரிய தீர்வு ஏற்படுத்த வேண்டும். போதைப்பொருட்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து மாவட்ட கலெக்டர்கள் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளுக்கான ஆய்வுக்கூட்டத்தில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். இதனை கருத்தில்கொண்டு சார் நிலை அலுவலர்கள் தொடர் கண்காணிப்பை மேற்கொள்வதோடு கடும் சட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கூறிய அவர் விழுப்புரம் வி.மருதூர் ஏரியில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்துமாறும் அறிவுறுத்தினார். இக்கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) அரிதாஸ், உதவி ஆணையர் (கலால்) முருகேசன் மற்றும் துணை போலீஸ் சூப்பிரண்டுகள், வருவாய்த்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Tags

Next Story