சாதி சான்றிதழில் பெயரை மாற்றக்கோரி போராட்டம்

சாதி சான்றிதழில் பெயரை மாற்றக்கோரி போராட்டம்
சாதி சான்றிதழில் பெயரை மாற்றக்கோரி அரங்கூரில் உள்ள இந்து காட்டு நாய்க்கன் நல சங்கத்தினா் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொட்டியம் அருகே அரங்கூா் கிராமத்தில் சுமாா் 100 க்கும் மேற்பட்ட காட்டுநாயக்கன் குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இவா்கள் தங்களது ஜாதி சான்றிதழில் உள்ள ராஜகம்பளம் என்பதை மாற்றி இந்து காட்டு நாயக்கன் என குறிப்பிட வேண்டி கடந்த சில ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனா். இந்நிலையில், அரங்கூா் கிராமத்தில் வசிக்கும் காட்டு நாயக்கா்கள் குடும்பத்தினா் 300-க்கும் மேற்பட்டோா் கோரிக்கைகளை வலியுறுத்தி கோட்டாட்சியா் ராஜனிடம் கோரிக்கை மனுவை அளித்தனா். இதையடுத்து அலுவலகம் முன்பு அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அவா்களுடன் கோட்டாட்சியா் ராஜன், வட்டாட்சியா் கண்ணாமணி, தொட்டியம் காவல் ஆய்வாளா் முத்தையன் ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில், சென்னை தலைமை செயலகத்தில் உள்ள ஆதிதிராவிடா் நல செயலரை சந்தித்து மானுடவியல் சான்று பெற்று உரிய ஜாதி சான்றிதழை ஒரு மாதத்துக்குள் வழங்குவதாக கோட்டாட்சியா் உறுதி அளித்தாா். அதன்பேரில் போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.

Tags

Next Story