கந்து வட்டி கொடுமைக்கு தீா்வு காண வலியுறுத்தி போராட்டம்!
போராட்டம்!
கோவில்பட்டியில், கந்து வட்டி கொடுமைக்கு தீா்வு காண வலியுறுத்தி காங்கிரஸ் நிர்வாகி நூதன போராட்டம் நடத்தினார்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் காங்கிரஸ் கட்சியின் வடக்கு மாவட்ட முன்னாள் துணைத் தலைவா் அய்யலுசாமி என்பவர், கந்து வட்டி கொடுமைக்கு தீா்வு காண வலியுறுத்தி போலி புரோ நோட்டுகள், காசோலைகளை கழுத்தில் மாலையாக அணிந்து, கண்களை கருப்புத் துணியால் கட்டிக்கொண்டு, ஒரு கையில் தராசும், மற்றொரு கையில் காந்தி உருவப்படமும் ஏந்தியபடி கோவில்பட்டி கோட்டாட்சியா் அலுவலகம் முன்பு நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டாா். பின்னா் கோரிக்கை மனுவை கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் நிஷாந்தனிடம் வழங்கினாா்.
Next Story