மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி 

மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி 

பேராவூரணி, சேதுபாவாசத்திரம் ஒன்றியங்களில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

பேராவூரணி, சேதுபாவாசத்திரம் ஒன்றியங்களில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி ஒன்றியத்தில் தமிழக அரசின் வழிகாட்டுதலின்படியும், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவுரைப்படியும் ஒன்றிய அளவிலான மாபெரும் மாணவர் சேர்க்கை பேரணி நடைபெற்றது. பேரணியை வட்டார கல்வி அலுவலர்கள் அங்கயற்கண்ணி, கலா ராணி, வட்டார வள மைய மேற்பார்வையாளர் முருகேசன் துவக்கி வைத்தனர். ஆசிரியர் பயிற்றுநர் சரவணன், சிறப்பாசிரியர்கள் மகாதேவி, சத்யா ஆகியோர் கலந்து கொண்டனர். பேரணிக்கான ஏற்பாடுகளை இல்லம் தேடி கல்வி வட்டார ஒருங்கிணைப்பாளர் இராமநாதன் செய்திருந்தார். பேரணியில் பேராவூரணி ஒன்றியத்துக்கு உட்பட்ட இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்கள் 250 பேர் கலந்து கொண்டனர். பேரணி வட்டார வள மையத்திலிருந்து துவங்கி பேருந்து நிலையம் வரை சென்று திரும்பியது.

பேரணிக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை பேராவூரணி காவல் நிலைய அதிகாரிகள் செய்திருந்தனர். சேதுபாவாசத்திரம் சேதுபாவாசத்திரம் வட்டார அளவிலான மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி குருவிக்கரம்பை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தொடங்கி, மடத்துவாசல், தச்சுத்தெரு, மருத்துவர் தெரு, மாரியம்மன் கோவில் தெரு வழியாக கடைவீதி வரை நடைபெற்றது. பேரணியை சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றியப் பெருந்தலைவர் மு.கி.முத்துமாணிக்கம் தொடங்கி வைத்தார். ஊராட்சி மன்றத் தலைவர் வைரவன் தலைமை வகித்தார். வட்டாரக் கல்வி அலுவலர்கள் சி.மீனா சுந்தரி, சுப.சிவசாமி, வட்டார வளமைய மேற்பார்வையாளர் ஜெ.கென்னடி, குருவிக்கரம்பை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மனோகரன், தலைமை ஆசிரியர்கள் மருங்கப்பள்ளம் ராஜேந்திரன், குருவிக்கரம்பை கிரேஸ் செல்வம், குறவன்கொல்லை மலையப்பன், சாந்தாம்பேட்டை குமரகுரு, கள்ளங்காடு லதா, நாடாகாடு விசாலாட்சி, குண்டாமரைக்காடு லதா, கஞ்சாங்காடு இந்திராணி முன்னாள் திமுக ஒன்றிய செயலாளர் சின்னப்பா, அனைத்து பள்ளி மேலாண்மை குழு தலைவர்கள், பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

கல்வி புரவலர் சந்திரமோகன் அனைவருக்கும் இனிப்பு வழங்கினார். ஏற்பாடுகளை இல்லம் தேடி கல்வி ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர் ராஜ்மோகன் செய்திருந்தார். இந்நிகழ்வுகளில், மாணவர்களை அரசுப் பள்ளியில் சேர்ப்பதனால் ஏற்படும் நன்மைகள் பற்றி பெற்றோர்களிடமும், பொதுமக்களிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. அரசுப் பள்ளி வாயிலாக கிடைக்கும் நலத்திட்டங்கள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அனைத்து ஆரம்பப் பள்ளிகளிலும் முதலமைச்சர் காலை உணவு திட்டம், புத்தகங்கள், குறிப்பேடுகள், சீருடைகள், காலணிகள், மருத்துவப் பரிசோதனைகள் பற்றி கூறப்பட்டது. ஆண்டுதோறும் மாநில அளவிலான கலைத் திருவிழா, சிறார் திரைப்பட விழா, சிறார் இலக்கியத் திருவிழா, விளையாட்டுப் போட்டிகள், வானவில் மன்ற போட்டிகள், வினாடி வினா போட்டிகள் ஆகியவற்றில் வென்ற மாணவர்களுக்கு வெளிநாடுகளுக்கு கல்வி சுற்றுலா ஆகியன பற்றி எடுத்துக் கூறப்பட்டது.

Tags

Next Story