போர்களமான வகுப்பறை - தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் பரபரப்பு

X
வகுப்பறையில் மாணவர்கள் மோதல் ஒருவர் கைது
சேலம் அருகே உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரி வகுப்பறையில் மாணவர்கள் ஒருவருக்கொருவர் தாக்கி கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம், அம்மாபேட்டை அருகே உள்ள நாமமலை பகுதியை சேர்ந்தவர் ராமசாமி. இவருடைய மகன் சுபாஷ் (வயது 19). இவர் அம்மாபேட்டையில் உள்ள ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். சம்பவத்தன்று கல்லூரி வகுப்பறையில் இவரது நோட்டு காணவில்லை. அப்போது அதே கல்லூரியில் படிக்கும் 17 வயதுடைய மாணவனிடம் அந்த நோட்டு இருப்பது தெரிந்தது.
இது குறித்து கேட்டபோது வகுப்பறையில் ஒருவருக்கொருவர் மோதிக்கொண்டனர். இதில் சுபாசுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 17 வயது மாணவனை கைது செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அந்த மாணவன், சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் சேர்த்தனர்.
Next Story
