தாய் திட்டியதால் மாணவன் தற்கொலை

தாய் திட்டியதால் மாணவன் தற்கொலை

யுவராஜ்

நாட்றம்பள்ளி அருகே தாய் திட்டியதால் பத்தாம் வகுப்பு மாணவன் விஷம் குடித்து உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

திருப்பத்தூர் அடுத்த கே.பந்தாரப்பள்ளி பகுதியை சேர்ந்த காந்தி என்பவர் மகன் யுவராஜ் வயது(15) அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார் இந்நிலையில் யுவராஜ் சரியாக படிப்பதில்லை என அவரது தாயார் ஷைலா. பள்ளி தலைமை ஆசிரியரிடம் நேற்று புகார் தெரிவித்ததை தொடர்ந்து பள்ளியில் இருந்து வீட்டுக்கு வந்த மாணவன் இரவு வீட்டில் இருந்த விஷம் குடித்து மயங்கி விழுந்துள்ளார்.

இதனைக் கண்ட அவனது பெற்றோர் சிகிச்சைக்காக நாட்றம்பள்ளி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு பின்னர் மேல் சிகிட்சிக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி பள்ளி மாணவன் யுவராஜ் உயிரிழந்தார். மேலும் பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது இதை குறித்து நாட்றம்பள்ளி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் பள்ளி மாணவன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது

Tags

Read MoreRead Less
Next Story