பத்தாம் வகுப்பு மாணவி தற்கொலை
திருநெல்வேலி மாவட்டம், உடையார்குளத்தில் மதிப்பெண் குறைந்ததால் பத்தாம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பாளையங்கோட்டை அருகே உள்ள உடையார்குளத்தை சேர்ந்த கள்ளத்தியான் மகள் தங்கமாரி (16).இவர் பாளையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வருகின்றார். அண்மையில் வெளியான தேர்வு முடிவில் மதிப்பெண் குறைவாக எடுத்ததால் மன அழுத்தத்தில் மாணவி தங்கமாரி இருந்துள்ள நிலையில் நேற்று (மே 19) திடீரென தூக்கப்பட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
Next Story