பிளஸ் 1 மாணவி தற்கொலை
தற்கொலை
அதகப்பாடி பகுதியில் பிளஸ் 1 மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தர்மபுரி மாவட்டம், இண்டூர் அருகே உள்ள அதகப்பாடியை சேர்ந்தவர் சதாசிவம். இவரது 16 வயது மகள், தர்மபுரியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். விடுமுறை நாளான நேற்று மாணவி வீட்டில் மின் விசிறியில் புடவையால் தூக்குப்போட்டு கொண்டார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் மற்றும் உறவினர் மாணவியை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்தபோது மாணவி இறந்து விட்டது தெரியவந்தது. இதுகுறித்து இண்டூர் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story