மாணவர் பேரவை மற்றும் மென்பொருள் குறியீடு சங்க துவக்க விழா

மாணவர் பேரவை மற்றும் மென்பொருள் குறியீடு சங்க துவக்க விழா
X

மாணவர் பேரவை, மென்பொருள் குறியீடு சங்க துவக்க விழா

திருவண்ணாமலை, எஸ்கேபி பொறியியல் கல்லூரியின் கணினி அறிவியல் துறை சார்பில் மாணவர் பேரவை மற்றும் மென்பொருள் குறியீடு சங்கம் துவங்கப்பட்டது. அதை தொடர்ந்து "தகவல் தொழில்நுட்பத் துறையின் பல்வேறு வேலை வாய்ப்புகள்" என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கம் நடைப்பெற்றது. இந்நிகழ்விற்கு கல்லூரி தலைவர் கு.கருணாநிதி தலைமை வகித்தார். இணைச் செயலாளர் கே.வி.அரங்கசாமி, முதன்மை நிர்வாக அதிகாரி முனைவர் ஆர்.சக்தி கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் முனைவர் எஸ்.பாஸ்கரன் மற்றும் கணினி அறிவியல் துறை தலைவர் முனைவர் என். புருஷோத்தமன் வாழ்த்துரை வழங்கினர். பிஆர்ஓ சையத் ஜஹிருத்தீன் கலந்து கொண்டார். நான்காமாண்டு மாணவர் ஜே.நிதின் பிரிதிவ் வரவேற்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் சிறப்புவிருந்தினராக "பிஎன்ஒய் மெல்லான் டெக்னாலஜிஸ்” நிறுவனத்தின் மூத்த மென்பொருள் நிபுணர் ஜே.ஓவியா கலந்து கொண்டு "தகவல் தொழில் நுட்பத்துறையின் பல்வேறு வேலை வாய்ப்புகள்" என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். இந்த கருத்தரங்கில் திரளான மாணவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். நிறைவாக நான்காமாண்டு மாணவி ஏ.சென்னம்மாள் நன்றியுரையாற்றினார்.

Tags

Next Story